கோட்டாபயஷவின் விஜயம் ஒரு வரலாற்று சான்று.

இலங்கை – இந்திய வரலாற்று சிறப்புமிக்க உறவுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விஜயம் ஒரு சான்று என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று நேற்று இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அந்தவகையில் இன்று (வெள்ளிக்கிழமை) குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த கோட்டாபய ராஜபக்ஷ பின்னர் ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள மோடி, “இலங்கை ஜனாதிபதியாக முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்த கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன்.

இலங்கை – இந்திய வரலாற்று சிறப்புமிக்க உறவுகளுக்கு இந்த விஜயம் ஒரு சான்றாகும், அதேநேரம் எமது பிணைப்பை வலுப்படுத்தவும், நல்லுறவை பலமூட்டவும் உதவும்” என பதிவிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்