தமிழகத்தில் கனமழை – அன்றாட வாழ்வு பாதிப்பு.

தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், திருச்சி, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்ட ஆட்சியர்களின் உத்தரவின் பேரில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வட,கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

கடலோர மாவட்டத்தில் பலத்த மழை பெய்கிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு முதலே திருச்சி, அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது.

மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் திருச்சி, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்