அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க நடவடிக்கை.

அயோத்தியில் விமான நிலையமொன்றை அமைக்க பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் விமான நிலையம் கட்டவேண்டும் என்ற கோரிக்கை பல காலமாக கூறப்பட்டு வருகிறது.

இதனிடையே, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதியும் வழங்கப்பட்டுள்ளமையால், எதிர்வரும் காலங்களில் பல மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் இங்கு ஏராளமானோர் வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க உத்தர பிரதேச அரசு, மத்திய அரசிடம் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கக்கூடும் எனவும் கூறப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்