புதிய வரிச் சலுகைகளால் அரசாங்கம் புத்துயிர் பெறும்.

புதிய வரிச் சலுகைகளுடன் பொருளாதாரத்தின் அனைத்து பிரிவுகளும் புத்துயிர் அடையும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புதிய வரிச் சலுகைகளுடன் அடுத்த ஆண்டு பொருளாதாரத்தின் அனைத்து பிரிவுகளும் புத்துயிர் அடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வருமானம் பெறும் போது விதிக்கப்படும் வரியால் அவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வருமானத்தில் வரியை அறவிட்ட பின்னரே மிகுதி சம்பளத்தை பெறுகின்றனர். குறிப்பாக ஒருவர் 1,25,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெற்றால், அவர் அந்த வருமானத்திற்காக வரி செலுத்துகின்றார்.

ஆகவே மாதந்தம் 30,000 முதல் 40,000 வரை நிர்வாக மட்டத்தில் உள்ள அதிகாரிகளின் சம்பளம் குறைக்கப்பட்டே வழங்கப்படுகின்றது.

ஆனால் எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி முதல் வரி அறவிடப்படாமல் சம்பளம் முழுமையாக வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் புதிய வரி நிவாரணங்களை வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் வெளியிடமுடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்