வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்!!

இந்தியாவிற்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கைஅரசாங்கம் நிறைவேற்றவேண்டும் இந்திய அரசு நினைவூட்டவேண்டும்-இயக்குனர் மு.களஞ்சியம்

இன்று இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையின் புதியஜனாதிபதி அவர்கள் இந்தியாவிற்குகொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்ற வேண்டும் என்றகட்டளையினை இந்தியஅரசு நினைவூட்டவேண்டும் தமிழகத்தின் இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் முல்லைத்தீவில்வைத்து கருத்துதெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் முல்லைத்தீவிற்கு பயணம்மேற்கொண்டு 28.11.19 ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்.

அவர் ஊடக சந்திப்பில் இந்தியாவில்இருந்து இலங்கைக்கு வந்தேன் பத்துஆண்டுகள்போர்முடிந்து இலங்கை மண் எப்படி இருக்கின்றது என்றுபார்ப்பதற்காக பயணம்மேற்கொண்டேன்.
போரின் பின்னர் அதன் வலியால் துன்புற்றுக்கொண்டிருக்கக்கூடி மக்களை நேரடியாக சந்திக்கவேண்டும் போர்நடைபெற்றபகுதி என்னசூழலில் இருக்கின்றது என்று நேரடியாக காணவேண்டும் என்ற நோக்கத்துடன் வந்துள்ளேன்.

இங்குவந்து மக்களைசந்தித்து அவர்களுக்கு இருக்கக்கூடியசிக்கல்கள் குறித்து பேசுகின்றபொழுது பல்வேறுஉண்மைகளை நான்அறிந்துகொள்ளமுடிந்தது.

கொழும்பில் இருந்து பலாலி விமான நிலையம்வந்து அங்குயாழ் பல்கலைக்கழக மாணவர்களை சந்திப்பதற்காக பல்கலைக்கழகத்தினைசுற்றி பார்ப்பதற்காகசென்றிருந்தேன் பல்கலைக்கழகம்மூடப்பட்டிருந்தது மாணவர்கள்வீதியில் நின்றிருந்தார்கள் மாணவர்கள்மாவீரர்கள் நிகழ்வினை கொண்டாடகூடாது என்பதற்காக பல்கலைக்கழகம் மூடப்பட்டுஇருந்து.

சிறப்புஅனுமதி வாங்கி நான் பல்கலைக்கழகத்திற்குள் சென்று அங்கு இருக்கக்கூடிய பல்துறைகளையும் தெரிந்துகொண்டேன்.

அதனைதொடர்ந்துநான் முல்லைத்தீவிற்கு பயணம்மேற்கொண்டேன் அங்கு போர் நடந்த பகுதிகளையும் மக்களை சந்தித்து பேசினேன். நேற்றுகோப்பாய் மாவீரர் நாள் நிகழ்வில் பங்கெடுத்தேன் வெறும்தொலைக்காட்சிகளில் இதனைபார்த்திருந்த நான் நேற்றுதான் உணர்வுபூர்வமாக மக்கள் மாவீரர்தினத்தினை எவ்வாறுகொண்டாடுகின்றார்கள் என்பதை நேரடியாக அனுபவப்பட்டேன்.

இன்று ஸ்ரீலங்காவில் புதியதாக பொறுப்பேற்றுஇருக்கக்கூடிய மதிப்பிற்குரியகோத்தபாயறாஜபக்ச அவர்கள் இன்று இந்தியாவிற்கு முதல் முறையாகசெல்லுகின்றார்.

அவர்ஜனாதிபதியாக பதவிஏற்றபின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்குசெல்வது மகிழ்ச்சியளிக்கின்றது.

இந்தியஅரசாங்கம் போர் காலகட்டத்தில் இலங்கையில் நடந்தஉள்நாட்டுபோரினை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என்று இலங்கைஅரசுடன் இணைந்து இந்தியஅரசாங்கம் செயற்பட்டபோது அன்றையஜனாதிபதி மகிந்தறாஜபக்ச அவர்கள் இந்தியாவிற்கு பல வாக்குறுதிகளைகொடுத்திருந்தார்.

அதில் ஒன்று 13ஆம் சட்டபிரிவிற்கும் மேலதிகமான அதிகாரத்தினை தமிழர்களுக்கு நாம் வழங்குவோம் என்றுசொன்னார் சிவசங்கர்மேனன், ஆர்.கே.நாராயணன் போன்றவர்கள் எல்லாம் அந்த வாக்குறுதியினை பெற்று இந்தியதலைமை அமைச்சருக்கு சொன்னார்கள் தமிழகத்தினைஆண்ட கருணாநிதிஅவர்களுக்கும் அந்த செய்திசொல்லப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் அன்று கொடுத்தவாக்குறுதிகளை இலங்கைஅரசு நிறைவேற்றியதா என்றுகேட்டால் நிறைவேற்றவில்லை என்பதை நான்அறிந்திருக்கின்றேன்.

இன்று இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையின் புதியஜனாதிபதி அவர்கள் இந்தியாவிற்குகொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்ற வேண்டும் என்றகட்டளையினை இந்தியஅரசு நினைவூட்டவேண்டும்.

இங்குபோரிற்கு பின்னர் மனவலியில் வாழ்ந்து கொண்டிருக்ககூடிய ஈழத்தமிழர்களுக்கு ஒருமருந்திடுகின்ற ஆறுதலான செய்தியாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.

இந்தியாவின் வெளிவிவகாரஅமைச்சராக பிரணாப்முகர்ஜி அவர்கள் இருந்தபோது எந்தெந்தவாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் முன்னாள்ஜனாதிபதி மகிற்தறாஜபக்ச அவர்கள் கொடுத்தார்களோ அந்த வாக்குறுதிகளை இன்று பதவியில் இருக்கக்கூடிய கோத்தபாஜறாஜபக்ச அவர்கள் நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கையினை தமிழர்கள் சார்பில் முன்வைக்கின்றோம்.

இங்குபோர் நடந்தபோது தற்போதைய ஜனாதிபதிஅவர்கள் இராணுவபொறுப்பில் இருந்துபோரினை நடத்தியது ஈழத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு எதிராகஅல்ல விடுதலைப்புலிகளுக்கு எதிராக இன்று விடுதலைப்புலிகள் அமைப்பு அழித்து ஒழிக்கப்பட்டு விட்டது என்று இலங்கைஅரசும்,இந்திய அரசும்தொடர்ந்து கூறிவரும் இந்தநிலையில் இங்குஇருக்கக்கூடிய மக்களை இலங்கை மக்களாக பாவித்து அந்த மக்களுக்குமேலதிகமான அதிகாரம் வழங்கி அவர்களுக்கு வேலைவாய்ப்பில்,கல்வியில் முன்னுரிமைகொடுத்து அவர்களை காக்கவேண்டும் என்று கோத்தபாஜறாயபக்ச அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அதேபோல் இங்கு இருக்கக்கூடிய மக்கள் ஒருபெரும் அச்சத்திற்கு உட்பட்டு இருக்கின்றார்கள். போர்காலத்தில் இராணுவபொறுப்பில் இருந்த ஒருவர் ஜனாதிபதியாக வந்திருப்பதால் அந்தஅச்சம் எல்லோரின் மனதிலும் படர்ந்திருக்கின்றது.

இலங்கை இராணுவம்போரிட்டது விடுதலைப்புலிகளுக்கு எதிராகவேஒளிய ஈழத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு எதிராக இல்லை என்கின்ற உணர்வினை இந்த அரசு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் அப்பொழுதான் இந்தமக்கள் அச்சத்தில்இருந்து விடுபட்டு அரசுடன் இணைந்து அச்சமற்ற வாழ்க்கையினை வாழமுடியும்என்று நான் கருதுகின்றேன்

அதேபோல் நிலஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்துஅவரவருக்கு உரிய நிலங்களை இந்தஅரசுகொடுக்கவேண்டும் காணாமல் ஆக்கப்ட்டமக்கள் குறித்த விபரங்கள் வேண்டும் என்று மக்கள் தொடர்ச்சியாகபோராடிக்கொண்டிருப்பதை நான் அறிகின்றேன் அதற்கானமுறையான சட்டரீதியான நடவடிக்கைகளையும் மகிந்தறாஜபக்ச அவர்களின் காலத்தில் ஏற்பட்டசறுக்கல்களை எல்லாம் சரிசெய்து புதியஜனாதிபதி தமிழ்மக்களுக்கு சரியான வழிகாட்டுதலை ஏற்படுத்துவார் என்றுநான் நம்புகின்றேன்

எந்தவிதான சிக்கல்களும் இல்லாமல் இந்தமண்ணில்சுற்றி பார்ப்பதற்கு மக்களுடன் உறவாடுவதற்கு மாவீரர் நாள்நிகழ்வில் கலந்துகொள்வதற்கு அனுமதித்த இலங்கை அரசிற்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்


Recommended For You

About the Author: Editor