பிச்சைக்காரர்களுக்கு பிறந்தது விடிவு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் செயற்றிட்டத்தின் கீழ் நகரங்களில் இருக்கும் சகல பிச்சைக்காரர்களையும் முகாம் ஒன்றுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அலங்கரிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.

ஏற்கனவே இதற்கு தேவையான ஆலோசனைகள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு உட்பட நாட்டின் பிரதான நகரங்களில் பிச்சைக்காரர்கள் நடமாடுவதால், பாதுகாப்புக்கு மட்டுமல்லாது நகரங்களில் அலங்காரத்திற்கு ஏற்படும் சிக்கலான நிலை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்படி பிச்சைக்காரர்கள் ரிதியகம முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.


Recommended For You

About the Author: Editor