கணவனின் கத்திக்குத்தில் மனைவி பலி

கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகரில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

கணவரால் 12 இடங்களில் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

எனினும்  கழுத்து, நெஞ்சு என 12 இடங்களில்  கத்திக்குத்து ஆழமாக பதிந்திருந்த்தால் அவருக்கு அதிகளவு குருதி வெளியேறியது. அதனால் அவர் உயிரிழந்தார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

இவ்வாறு உயிரிழந்தவர் 3 பிள்ளைகளின் தாயார் என்று தெரிவிக்கப்பட்டது.


Recommended For You

About the Author: ஈழவன்