கிழக்கில் விவசாயம் பாதிப்பு!!கிழக்கில் விவசாயம் பாதிப்பு!!

அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக படுவான்கரை, நிந்தவூர், அட்டப்பள்ளம் காரைதீவு, சம்மாந்துறை, மாவடிப்பள்ளி போன்ற பிரதேசத்தின் நெல் வயல்கள் மழை வெள்ளத்தால் நிரம்பியுள்ளன.

தொடர்ச்சியாக வெள்ள நீர் வயல்களில் தேங்கியுள்ளதால் வேளாண்மை அழிந்து வருகின்றது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது.

நிந்தவூர் காரைதீவு எல்லையில் அமைந்துள்ள முகத்துவாரத்திற்குச் செல்லும் வாய்க்காலில் காணப்பட்ட ஆற்று வாழைகள் காரைதீவு பிரதேச சபையால் அகற்றப்பட்டு வெள்ள நீர் கடலுக்குள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழையின் காரணமாக அம்பாறை மாவட்டதிலுள்ள சிறுகுளங்கள் நிரம்பி வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் தமது விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor