ரணில், சஜித்துடனான பேச்சுவார்த்தை வெற்றி – மனோ கணேசன்!!

ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள கட்சித் தலைவர்கள் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ரணில் விக்ரமசிங்கவை இன்று முற்பகல் சந்தித்தனர்.

இதனை அடுத்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மனோ கணேசன், நாளைய தினமும் மீண்டும் சஜித் பிரேமதாசவை சந்திக்கவுள்ளதாக கூறினார்.

இந்த சந்திப்பின்போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடு அல்லது பேசப்பட்ட விடயங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்காதிருப்பதற்கு இரு தரப்பினரும் இணங்கியதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், பழனி திகாம்பரம், ரிஷாட் பதியுதீன், பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor