
நாட்டில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமையாது நாட்டையும் மக்களையும் பாதுகாப்பிற்கே அன்றி சிறுபான்மை மக்களை துன்பப்படுத்துவதற்கு அல்ல என மல்வத்தை பீடத்தின் அனுநாயக்கர் வண. திம்புல்கும்புறே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்
உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மல்வத்தை பீடத்தின் அனுநாயக்கரை சந்தித்து ஆசிபெற்ற போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி பதவிக்கு வருபவர் தமிழ் முஸ்லிம் மக்களது ஆதரவு இல்லாமல் தெரிவு செய்யப்பட முடியாது என, தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகள் நினைத்ததை , இம்முறை நடை பெற்ற தேர்தல் மாற்ரி அமைத்துள்ள்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சகல இனத்தவர்களுக்கும் வேறுபாடின்றி சேவை செய்ய தன்னை அர்ப்பணிக்க கூடியவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதோடு நாட்டில் எத்தகைய அபிவிருத்திகள் மேற்கொண்டாலும் அவை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடாது என்பதை ஜனாதிபதி நன்கு விளங்கிகொண்டு செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முழு நாட்டிலும் அபிவிருத்திகள் மேற்கொள்ளும் போது வடக்கு கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படக் கூடாது என்றும், அவை அனைத்து மக்களின் பாதுகாப்பிற்காகவே அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேரர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் பதவியேற்பு வை பவத்தில் அவர் நிகழ்த்திய உரையைப் பார்க்கும்போது ஒரு நல்ல பயணத்தை ஜனாதிபதி கோடாபய ஆரம்பித்துள்ளார் என்பது தெளிவாக புலனாகின்றதாக தெரிவித்த அவர், அரசியல் பேதங்களை மறந்து புதிய ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பினை வழங்கி நாட்டின் அபிவிருத்தியினை மேலெழச்செய்ய சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.