அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு!!

அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ, மிச்சிகன் மற்றும் மிசிசிப்பி உள்ளிட்ட மகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய நெபரஸ்கா, தெற்கு டகோடா, மின்னிசோட்டா, விஸ்கோன்சின் உள்ளிட்ட மகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்படக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன்காரணமாக வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

டென்வர் நகரில் கடும் பனிப்பொழிவு காரணமாக 500 விமானங்களின் பயண நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், சில விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Recommended For You

About the Author: Editor