230 பில்லியன் சிறிலங்கன் விமான சேவைக்கு நட்டம்!

சிறிலங்கன் விமான சேவை ஒரு வருட காலப்பகுதியில் 44 பில்லியன் ரூபாய் நட்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒரு வருட காலப்பகுதியில் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது.

சிறிலங்கன் விமான சேவையின் வருடாந்த கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பித்து, கணக்காய்வாளரான டபிள்யு.பீ.சீ. விக்ரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கன் விமான சேவைக்கு இதுவரையில் 230 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நட்டம் ஏற்பட்டுள்ளமை காரணமாக, சிறிலங்கன் விமான சேவையை முன்கொண்டு செல்வதில் நிச்சயமற்ற தன்மை ஏற்படக்கூடும் என கணக்காய்வாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor