
ஊவாமாகணத்தில் அத்திமலை பகுதியில் தனியார் பஸ் ஒன்று குடைச்சாய்ந்து இடம்பெற்ற விபத்தில் பெண்கள் நால்வர் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பஸ் ஒன்று குடைச்சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றதகவலுக்கமைய விசாரணைகளை ஆரம்பித்ததாக அத்திமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதன்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் வீதியை விட்டு விலகிச் சென்று குடைச்சாய்ந்துள்ளது.
சம்பவத்தில் பெண்கள் நால்வர் உட்பட 10 பேர் காயமடைந்து அத்திமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்திமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.