ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு – 16 பேர் பலி.

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு குண்டுத் தாக்குதல்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தின் வடகிழக்கில் வைக்கப்பட்டிருந்த இரண்டு குண்டுகளே நேற்று(புதன்கிழமை) மாலை இவ்வாறு அடுத்தடுத்து வெடித்துள்ளன.

இதன்போது ஆறு பெண்கள், ஆறு சிறுவர்கள் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலிபான் பயங்கராவதிகளினால் இந்த குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்