யாழ்.மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் தோற்கடிப்பு.

யாழ்.மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்ப்பால் தோற்கடிக்கப்பட்டது.

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் காலை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது.
அதன் போது அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சபையில் சமர்பிக்கப்பட்ட போது அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாத்திரமே ஆதரவு வழங்கினார்கள். அதனால் குறித்த வரவு செலவு திட்டத்திற்கு 16 பேர் வாக்களித்தனர்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 21 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். அதனை அடுத்து மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
இதேவேளை இன்றைய அமர்வில் 7 உறுப்பினர்கள் சமூகமளிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: ஈழவன்