க.பொ.த சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு!!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இந்நிலையில் பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காதவர்கள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www. Doenets.lk இற்குள் பிரவேசித்து தமது அடையாள அட்டை இலக்கத்தை பதிவு செய்து தமக்கான அனுமதி அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

எனினும் அவ்வாறு செய்ய முடியாதவர்கள் 011 2784208 அல்லது 011 3183850 அல்லது 011 2784537 அல்லது 011 3140314 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அனுமதி அட்டைகளை தொலைநகல் (Fax) மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர்அறிவித்துள்ளார்.

இதேவேளை இம்முறை நான்காயிரத்து 987 பரீட்சை நிலையங்களில் கல்விப் பொது தராதர சாதாரண தரப்பரீட்சை நடைபெறவுள்ளதுடன், 7 லட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor