அனைத்துலக நீதிமன்றத் தீர்ப்பை மலேசியா ஏற்றுக்கொள்கிறது

பெட்ரா பிராங்கா தீவை சிங்கப்பூருக்கு வழங்கிய அனைத்துலக நீதிமன்றத் தீர்ப்பைக் கோலாலம்பூர் ஏற்றுக்கொள்கிறது என்பதை மலேசியப் பிரதமர் மஹதீர் முகமது மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஆசியான் நாடுகள் எவ்வாறு இருதரப்பு மரியாதையின் அடிப்படையில் பணியாற்றுகின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு என்று அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் 33 ஆவது ஆசிய-பசிபிக் வட்டமேசை மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்திய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பெட்ரா பிராங்கா தீவு மலேசியாவுக்கே உரித்தானது என்பதை எவரும் மறுக்கமுடியாது என்ற போதும், அது சிங்கப்பூருக்குச் சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் வேறு வழிகள் கிடையாது. ஆகவே நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஆசியான் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு, எல்லாவற்றையும் அவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதல்ல.

இருதரப்பு மரியாதை, ஒத்துழைப்பு, அரசுரிமைச் சமத்துவம், பொதுவான பிராந்திய அபிவிருத்தி அனுகூலம் ஆகிய அடிப்படைக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டிருப்பதே முக்கியம் என்றும் பிரதமர் மஹதீர் முகமது சுட்டிக்காட்டியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor