எல்லங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும் அஞ்சலி.

வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக சுடரேற்ற முற்பட்ட போது இராணுவத்தினர் அதனை தடுத்தி நிறுத்தியுள்ளனர்.

பின்னர் இராணுவ முகாமுக்கு அருகில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவீரர் நாளை முன்னிட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்,கே.சிவாஜிலிங்கம் தலைமையில் வடமராட்சி எல்லங்குளம் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியில் சுடரேற்ற முற்பட்ட போது , இராணுவத்தினர் இப்பகுதியில் சுடரேற்ற வேண்டாம் என கூறி அதனை தடுத்து நிறுத்தினர்.

அதன் பின்னர் துயிலுமில்லத்திற்கு அருகில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடமராட்சி எல்லங்குளம் துயிலும் இல்லம் இடித்தழிக்கப்பட்டு தற்போது படையினர் பாரிய இராணுவ முகாமை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்