
உலகின் மிகப்பெரிய மலர் படுக்கை என்ற கின்னஸ் சாதனைக்காக டுபாய்க்கு சுமார் 41,444 கிலோ சாமந்திப் பூக்கள் பெங்களூருவிலிருந்து அனுப்பப்பட்டன.
டுபாய் விழா நகரத்தில் கின்னஸ் சாதனைக்காக உலகின் மிகப்பெரிய மலர்ப்படுக்கை அமைக்கப்பட்டது. ‘பொறுமைக்கான மலர்கள்’ என்று தலைப்பிடப்பட்ட இச்சாதனை இத்தாலியின் மலர் படுக்கை சாதனையை முறியடித்தது.
எனினும் இத்தாலி மலர் படுக்கை கடந்த 2016ஆம் ஆண்டு 3980.84 சதுர மீ.க்கு மேற்கொள்ளப்பட்டது.
அந்தவகையில் தற்போது இச்சாதனையை முறியடித்த டுபாய் 5426.65 சதுர மீற்றருக்கு மலர்கள் விரித்திருந்தது. இந்தச் சாதனை நிகழ்வை டுபாய் அமைச்சகத்துடன் இணைந்து கேரள முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு நிகழ்த்தியது.
இதில் இந்தியா, கென்யா மற்றும் பல நாடுகளிலிருந்து டுபாய்க்கு சுமார் 50 டென் மலர்கள் கொண்டு வரப்பட்டன.
இவற்றில் 7 டென் மலர்கள் வாடிவிட்டதால் 9,290.30 சதுர மீற்றருக்கு நிகழ்த்தப்பட வேண்டிய சாதனை 5426.65 சதுர மீற்க்கு மட்டுமே மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.