
மட்டக்களப்பு கல்லடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதனாலேயே நேற்று(செவ்வாய்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு பொலிஸார் உள்ளிட்ட மூவரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.