
எடின்பரோ பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆதிவாசிகளின் மண்டையோடுகளை பாதுகாக்க உரிய இடமொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆதிவாசிகளின் தலைவர் ஊரிவரிகே வன்னிலத்தோ இவ்வாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த மண்டையோடுகள் தற்போது தம்பான ஆதிவாதிகள் நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இதுதொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆராய்சிகளுக்காக பிரித்தானியாவிற்கு கொண்டு செல்லப்பட்டிருந்த ஆதிவாசிகளின் மண்டையோடுகள் அண்மையில் எடின்பரோ பல்கலைக்கழகத்தினால் மீண்டும் கையளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.