இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் இன்று.

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது.

கடந்த திங்கட்கிழமை புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்திருந்தது.

இதேவேளை, அமைச்சுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் இன்று வழங்கிவைக்கப்படவுள்ளன.


Recommended For You

About the Author: ஈழவன்