மாவீரர் நாளில் பங்கெடுக்க பிரான்சு வந்தடைந்த வேல்முருகன்!

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாள்.ஜேர்மனி தமிழீழத் தேசிய மாவீரர் நாள் ஏற்ப்பாடுகள் பணி தீவிரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

பிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் கலந்துகொள்வதற்காக தாய்த்தமிழகத்தில, ஈழத் தமிழர்களுக்காக பல போராட்டங்களை நடாத்தும்  “தமிழக  வாழ்வுரிமை கட்சியின்” தலைவர் திரு. தி. வேல்முருகன் அவர்கள் நேற்று  பிரான்சு- பாரிஸ் நகரை வந்தடைந்தார்.

அவரை விண்ணுந்து நிலையத்தில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் தமிழீழ தேசியக்கொடியுடன் சென்று வரவேற்றார்கள்.

2015 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி பிரான்சில் தமிழின அழிப்பின் ஆறாம் ஆண்டு நினைவேந்தலில் திரு வேல்முருகன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தியிருந்தார்.


Recommended For You

About the Author: Editor