அஞ்சலிக்கு தயாரானது கனகபுரம் துயிலுமில்லம்!

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தி அடைந்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து அஞ்சலி செலுத்தும் துயிலும் இல்லமான கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த வருடம் 20,000ற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு உயிரிழந்த தங்கள் உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில் நாளையும் அதிகளவான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்துவர் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிடுகின்றனர்.

குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தினை அழகுபடுத்தும் பணிகள் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரியவருகின்றது.


Recommended For You

About the Author: Editor