கிரீன் அட்டை லொட்டரி விசாவில் மோசடி ?

பன்முகத்தன்மை விசா அல்லது கிரீன் அட்டை லொட்டரி விசா மோசடி குறித்து அமெரிக்க தூதரகம் மின்னஞ்சல் மூலம் எச்சரித்துள்ளது.

இந்த மோசடி மின்னஞ்சல்கள் மற்றும் கடிதங்களுக்குப் பின்னால் உள்ள மோசடியாளர்கள் விசா விண்ணப்பதாரர்களிடமிருந்து பணம் பெறுவதற்கான முயற்சி என்றும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் விசாவை பெற்றுக்கொள்ள தெரிவ செய்யப்பட்டார்களா என்பதை www.dvlottery.state.gov என்ற முகவரிக்கு சென்று பார்வையிட முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

இதேவேளை விண்ணப்ப செயல்முறைக்கான கட்டணங்கள், அமெரிக்க தூதரகம் அல்லது தூதரக காசாளரிடம் மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என்றும் மாறாக வேறு எந்த முறைமூலமும் செலுத்த முடியாது என்றும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கட்டணம் செலுத்துமாறு கேட்டு தாங்கள் ஒருபோதும் மின்னஞ்சலை அனுப்ப மாட்டோம் என்றும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்