
முறையான ஆய்வு மேற்கொள்ளப்படும் வரை கடந்த அரசாங்கத்தின் திட்டங்களான எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா மற்றும் சலுகைக் கடன் திட்டங்களை நிறுத்தி வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்தவகையில் தேசிய பொருளாதாரத்தின் முன்னுரிமை வழக்கும் திட்டங்களை அடையாளம் காணப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று நிதி அமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்தோடு ஒரு முறையான ஆய்வுக்குப் பின்னர், இந்த கடன் திட்டங்களை ஒரு பரந்த நோக்கத்துடன் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் நிதி அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.