கனடாவில் ஒரு தீவுகளின் ஆரம்ப விலை 1 மில்லியன் டொலர்.

நம் நாட்டில் சாதாரண வீடு ஒன்றின் பெறுமதியில் கனடாவில் குட்டித் தீவு ஒன்றையே கொள்வனவு செய்யலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

சிறிய அறைகளைக் கொண்ட அடுக்குமாடி வீடுகளுக்கான விலைகளே பல மில்லியன் டொலர் கணக்கில் உள்ளதுடன் வீட்டு வாடகையும் மிக அதிகமாகும்.

ஆனால் ஆடம்பர வீடு ஒன்றைக் கொள்வனவு செய்யும் விலைக்கு, கனடாவில் ஒரு தீவையே கொள்வனவு செய்துவிடலாம்.

நோவா ஸ்கோஷா (Nova Scotia) என்னும் மாநிலத்திலுள்ள தீவுகளின் விலை, 1,800 சதுர அடி வீட்டின் விலையை விடக் குறைவாகவுள்ளது.

1,800 சதுர அடிகளைக் கொண்ட அடுக்குமாடி வீட்டின் விலை சுமார் 421,245 அமெரிக்க டொலர்களாகும். (560,290 கனேடிய டொலர்)

அட்லாண்டிக் கடலில் அமைந்திருக்கும் குறித்த தீவுகளில் தற்போது பல மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தொழில் வாய்ப்பு, குறைந்த வரி விதிப்பு போன்ற சலுகைகளும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த தீவுகளின் மக்கள் தொகை 1 மில்லியனுக்கும் குறைவாகவே உள்ளமை இன்னும் சிறம்பம்சமாகும்.

சற்று பெரிய அளவிலான தீவுகளின் ஆரம்ப விலை வெறுமனே 1 மில்லியன் டொலராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்