வீரர்களிடம் மன்னிப்பு கோரிய பிலிப்பீன்ஸ்.

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பாக பிலிப்பீன்ஸ் அரசாங்கம் விளையாட்டு வீரர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான தென்கிழக்காசிய நாடுகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியை பிலிப்பீன்ஸ் ஏற்று நடத்துகின்றது. இதற்கிடையே, அங்கு குழப்பங்கள் ஏற்பட்டு குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்துள்ளது.

பிலின்பீன்ஸின் விமான நிலையத்தில் சென்றிறங்கிய விளையாட்டு வீரர்கள் சிலர் 9 மணி நேரம் வரை அங்கே காத்திருக்க நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில குழுவினர், தவறான விடுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பயணப்பைகள் மாற்றி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்போடிய வீரர்களும், கிழக்குத் திமோர் வீரர்களும் இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டனர். கிழக்குத் திமோர் வீரர்கள், தவறான விடுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குழப்பங்களுக்கும் தவறுக்கும் மன்னிப்புக் கோருவதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இறுதி நேரத்தில் பயணத் திட்டங்கள் உறுதி செய்யப்பட்டதாலும், விடுதிகள் பிற்பகலில்தான் விருந்தினர்களை ஏற்றுக்கொள்ளும் என்பதாலும் குழப்பம் நேர்ந்ததாக ஏற்பாட்டுக் குழு குறிப்பிட்டுள்ளது.

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள், வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்