மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற நிர்மலா தேவி கைது.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற வழக்கில் இரண்டு முறை நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நிர்மலா தேவி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற வழக்கில் பேராசிரியராக இருந்த நிர்மலா தேவி ஏற்கனவே கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கபட்டிருந்தார்.

மதுரை மத்திய பெண்கள் தனி சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்திருந்த இவர், வழக்கு விசாரணையில் ஆஜராகி சென்றுகொண்டிருந்தார்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக அவர் இரண்டு முறை ஆஜராகவில்லை இதன் காரணமாக இதனால் அவர் மீண்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து மதுரை மத்திய பெண்கள் தனி சிறையில் நிர்மலா தேவி அடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்