விரக்தியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இடைக்கால அரசாங்கத்தின் 15 அமைச்சரவை பதவிகளில், ஐந்து அமைச்சர்கள் ஸ்ரீ.ல.சு.க.வுக்கு வழங்குவதற்கு முதலில் வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த 22 ஆம் திகதி அமைச்சர்கள் பதவி நியமனத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இரண்டு அமைச்சு பதவிகள் மட்டுமே கிடைத்தது.

நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்த்திருத்த அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவும், பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி வலுசக்தி அமைச்சராக மஹிந்த அமரவீரவும் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.

இந்நிலையில் குறைந்த பட்சம் ஸ்ரீ.ல.சு.க.வுக்கு மூன்று அமைச்சு பதவிகள் வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என ஸ்ரீலசுகவுக்குள் சில உரையாடல்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் இன்று இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதெரிவித்திருந்தார்.

இருப்பினும், இதுவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சேர்ந்த எந்த எம்.பி.க்கும் அழைப்பு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் தற்போது கடுமையான விரக்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Recommended For You

About the Author: Editor