5G ,5 மாத கருவையும் அழிக்கும்.

யாழ்.மாநகரசபையால் நிறுவப்பட்டுவரும் ஸ்மாட் செல்லூடர் கோபுரங்களின் செயற்பாட்டை விரைவுபடுத்த5-ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுமாயின் கருவில் உள்ள 5 மாதச் சிசு கூட கருவிலே அழிந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

யாழ்.மாநகர சபையால் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொழில்நுட்ப சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் தனியார் நிறுவனம் ஒன்றினூடாக நவீன தொழில்நுட்பசேவையை வழங்கும் நோக்கில் 10 இற்கும் மேற்பட்டதொலைத் தொடர்புக்கோபுரங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன.

குறித்த நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கோபுரங்களில் தொழில்நுட்ப சேவை தொடர்பாக மாநகரசபை உறுப்பினர்களுக்கோ அப்பகுதி மக்களுக்கோ தெளிவானவிளக்கம் அளிக்கப்படாமல் குறித்த கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

மாநகரத்தின் அபிவிருத்திக்கு தொழில்நுட்பச் சேவைஅவசியமான நிலையில் மக்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய தொழில்நுட்பங்கள் பொருத்தப் படுமாயின் குறித்தசேவை தொடர்பில் மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிஏற்படும்.

யாழ்.மாநகர சபையால் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொலைத் தொடர்பு சேவையை நவீனப்படுத்த குறித்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் போது மக்களிடமோ, சுகாதாரத்துறை மற்றும் சிவில் அமைப்புக்களுக்குகுறித்த திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தப்படாமல் ஒப்பந்தம் சபையால் கைச்சாத்திடப்பட்டது.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பிரதேசங்களில் குறித்த தொலைத்தொடர்புக்கோபுரங்கள் நிறுவப்பட்டு வருகின்றமையும் இதனூடாக குறித்த நிறுவனம் துணைநிறுவன சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் 5-ஜி தொழில்நுட்பத்தை பிரயோகிக்க நேரிடும்.

இவ்வாறு 5-ஜி தொழில்நுட் பம் பிரயோகிக்கப்பட்டால் அதனூடாக வெளியேற்றப்படும் றேடியேசன் கதிர்வீச்சுக்கள் மனித மற்றும் விலங்குகளின் உடலில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும். உலகில் அபிவிருத்திஅடைந்த நாடுகளில் கூட பரிந்துரையில் உள்ள ஓர் தொழில்நுட்பச் செயற்பாட்டை இலங்கையில் அதுவும் யாழில் பரிசோதனை செய்ய நினைப்பது எதிர்காலச் சந்ததியினரை அழிக்கும் செயல் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.


Recommended For You

About the Author: ஈழவன்