அதாவுல்லா மன்னிப்புக் கேட்க வேண்டும் – சுமந்திரன்.

அதாவுல்லா மலையக மக்களிடமும் அனைத்து தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோட்டத் தொழிலாளர்களை இழிவாக பேசிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் நீரை வீசியிருந்தார்.

தோட்டத் தொழிலாளர் தொடர்பாக முறை தவறிய வார்த்தைகளை பாவித்தமையினாலேயே அப்படி செய்ததாக மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) மனோ கணேசனுக்கு ஆதரவாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சுமந்திரன், “அதாவுல்லா மலையக மக்களிடமும் அனைத்து தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும். எமது சொந்தங்களைக் கேவலமாக விளிப்பதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என பதிவிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்