ஸ்மார்ட் லாம் என்றால் என்ன ?

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் நிறுவப்பட்டு வரும் “ஸ்மார்ட் லாம் போஸ்ட்” தொடர்பில் பரவலாக எதிர்ப்புக்கள் கிளம்பி வருகிறது. அது தொடர்பில், தொழினுட்பவியலாளர் ஒருவர் தெரிவிக்கையில் ,
Smart lamp post என்பது நவீன வசதிகளை உள்ளடக்கிய தெருவிளக்கு. இதில் உள்ளடப்ப்ட்டுள்ள வசதிகள் , CCTV கமெரா , EV வாகன சார்ஜ் , தொலைதொடர்பு 4G & 5G க்குரிய அலைபரப்பு பகுதி, சூழலை கண்காணிக்கும் சென்சார்கள் மற்றும் IoT (Internet of things) Module .
இதை பாரிய அளவில் நடைமுறைபடுத்திய நாடு சிங்கப்பூர். சீனாவிலும் இது மிகவும் பிரபலமாக நடைமுறைப்படுத்த பட்டுள்ள அதேவேளை அங்கு Smart lamp post இல் பயன்படுத்தப்படும் ஆள் அடையாளம் காணும் கமெராக்கள் மூலம் பாதுகாப்பு துறை மிகவும் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் கதிர்வீச்சு பாதிப்புகள் ஏற்படும் என கூறப்படுவது ஏற்றுக்கொள்ள பட கூடியது அல்ல. 4G / 5G பரிமாற்ற கற்றைகள் வழமையான அனுமதிக்கப்பட்ட frequency இல் மாத்திரமே இதிலும் பயன்படுத்தப்படும்.
Smart lamp post கள் மூலம் அலைபரப்பு செய்யப்படும் செறிவு வழமையான சூழல் கதிர் வீச்சு மட்டத்துக்கு அமையவே இருக்கும் . அதிக போஸ்ட் என்றுவிட்டு மின்காந்த அலையை அளவுக்கு அதிகமாக தெறிக்க விடுவதில்லை.
வழமையாக 4G / 5G இல் உள்ள அதே கதிர்வீச்சு மட்டம் தான் இங்கும் இருக்கும். கதிர்வீச்சை எதிர்த்தால் 5G கற்றைகளை தான் எதிர்க்க வேண்டும். Smart lamp post களை அல்ல. என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: ஈழவன்