
கொங்கோவின் கிழக்குப் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 19 பேருடன் சென்ற சிறியரக விமானம் நிலைதடுமாறி கீழே விழுந்து நொறுங்கியது.
கிழக்கு பகுதியில் உள்ள வடக்கு கிவு மாகாணத்துக்குட்பட்ட கோமா நகரில் இருந்து சென்ற குறித்த விமானம் பேனி நகரை நோக்கி செல்ல ஆம்பித்த சில நிமிடங்களில் கோமா நகரின் அருகாமையில் மேப்பன்டோ என்ற இடத்தில் வீழ்ந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் 18 பேரின் உடல்களை மீட்புப் படையினர் கண்டெடுத்துள்ள நிலையில் அதில் சென்றவர்களில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், விமானம் கீழே விழுந்த குடியிருப்பு பகுதியில் இருந்த சிலரும் இந்த விபத்தில் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.