ஹட்டன் தீ விபத்தில் மூன்று கடைகள் தீக்கிரை.

ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று கடைகள் தீக்கிரையாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

எரிவாயு சிலிண்டர் தீப்பற்றியதையடுத்து, இன்று (திங்கட்கிழமை) காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதில் மூன்று கடைகள் தீப்பற்றி எரிந்ததில், ஒரு கடை முற்றாக அழிந்ததுடன், ஏனைய 2 கடைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லையென்றும் விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் மதிப்பீடு செய்யப்படாத நிலையில் நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்