பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ள முக்கிய தகவல்!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ள நிலையில், குறித்த பரீட்சை அடுத்த மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இம்முறை இப்பரீட்சைக்காக விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், 4,987 பரீட்சை மத்திய நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளதுடன், 554 இணைப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இரத்மலானை, தங்காலை, மாத்தறை. சிலாபம், கொழும்பு மெகசின் சிறைச்சாலை, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை, வட்டரெக்க சனித்தா வித்தியாலயம், நேபாளம் காத்மண்டு நகரத்தில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகம் ஆகிய இடங்களில் இந்த விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இம்முறை இப்பரீட்சைக்கு 4,33,050 பாடசாலை பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் 2,83,958 தனியார் பரீட்சார்த்திகள் இப்பரீட்சையில் தோற்றவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இம்முறை இப் பரீட்சையில் 7,17,008 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor