
போதையற்ற தேசமாக நம்நாட்டினை ஆக்கவேண்டுமென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தூரநோக்கின் அடிப்படையில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்திற்கு வடமாகாணத்தின் பங்களிப்பை வழங்கும் முகமாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டங்களில் ஒன்றான போதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூண்களை அனுப்பும் நிகழ்வு ஆளுநர் அவர்களின் பங்குபற்றலுடன் இன்று (26) முற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதேவேளை வடமாகாணத்தின் ஐந்து மாவட்ட செயலங்கள், திணைக்களங்களிலும் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


