ரெலோவிலிருந்து சிறிகாந்தா உள்ளிட்ட மூவர் நீக்கம்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் என்.சிறிகாந்தா உள்ளிட்ட மூவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ரெலோவின் தலைமைக்குழு கூட்டத்தில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்சி செயலாளர் என்.சிறிகாந்தா, யாழ் மாவட்ட அமைப்பாளர் சில்வெஸ்டர் விமல்ராஜ், துணை அமைப்பாளர் ஜெயரட்ணம் ஜெனார்த்தனன் ஆகியோரே இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் விளக்கமளிக்க ஒரு வாரம் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

ரெலோ அமைப்பின் முடிவிற்கு மாறாக, கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா மற்றும் யாழ் மாவட்ட கிளையின் ஒரு பகுதியினர், ஜனாதிபதி தேர்தலில் எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஆதரித்திருந்தனர். அத்துடன்,சிவாஜி ஆதரவு பிரச்சார கூட்டங்களில் ரெலோ மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பை காரசாரமாக விமர்சித்திருந்தனர்.

இத்தகைய காரணங்களின் காரணமாகவே அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படும் என கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்