மஹிந்த – மைத்திரி சந்திப்பு.

பொதுஜன பெரமுனவும் சுதந்திரக்கட்சியும் கூட்டணியாக சேர்ந்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துரையாடவுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொதுஜன முன்னணியின் கீழ் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கலந்துரையாட தீர்மானித்துள்ளது.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், இரு கட்சிகளும் பொதுக் கூட்டணியின் கீழ் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.

அந்தவகையில் தற்பொழுது பொதுத் தேர்தலில் போட்டியிடும் முறைமை குறித்தும், வேட்பாளர்கள் நியமனம் தொடர்பிலும் இரு கட்சிகளும் கலந்துரையாடவுள்ளன.

குறித்த கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்