கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண.

கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே இந்த நியமனத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து, ஏற்கனவே பதவி வகித்த 9 மாகாணங்களுக்குமான ஆளுநர்களை உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் கடந்த வாரத்தில் உத்தரவிட்டது.

இதற்கு அமைவாக அனைத்து ஆளுநர்களும் பதவி விலகினர். இதனடிப்படையில் 6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.

எனினும் வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணத்திற்கான ஆளுநர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கிழக்கு மாகாண ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனத்தை இவ்வாரம் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வடக்கு மற்றும் தென் மாகாணத்திற்கான ஆளுநர்கள் குறித்த தீர்மானம் நாளை திங்கட்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்