தமிழ்மொழியை அகற்றுவோரைக் கைது செய்ய பிரதமர் மகிந்த பணிப்பு

தென்னிலங்கையில் வீதிகளின் பெயர்ப்பலகைகளில் உள்ள தமிழ்மொழியை அகற்றியவர்கள் தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பித்து அவர்களைக் கைது செய்யுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாணாந்துறை மற்றும் கெரவலப்பிட்டிய ஆகிய பகுதிகளில் உள்ள வீதிகளின் பெயர்ப்பலகையில் உள்ள தமிழ்மொழி இனந்தெரியாதோரால் கடந்த சில நாள்களில் அகற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியதுடன், ஆட்சி மாற்றத்தின் பின் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் பேரினவாத சக்திகளின் ஆட்டம் ஆரம்பம் என்று சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் வீதிகளின் பெயர்ப்பலகைகளில் உள்ள தமிழ்மொழியை அகற்றியவர்கள் தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பித்து அவர்களைக் கைது செய்யுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று மாலை இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்