எண்ணெய் சருமம் இருப்பவர்களுக்கு பேர்ல் ஃபேஷியல்

எண்ணெய் சருமம் இருப்பவர்களுக்கு அழுக்குகள் இறந்த செல்கள் ஆகியவை சருமத் துளைகளிலேயே அடைப்பட்டு சருமத்தை கடினமாக்கி,

பிரச்சனைகளைத் தரும். இவர்களுக்கு இந்த பேர்ல் ஃபேஷியல் மிகவும் சிறந்த பலனை தரும்.

எண்ணெய் சருமத்தினருக்கு உகந்த ஃபேஷியல்
சருமத்தை ஆழமாக சுத்தபடுத்த ஸ்க்ரப், க்ளென்ஸர், ஆகியவை உபயோகப்படுத்த வேண்டும். சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்க மாய்ஸ்ரைஸர் உபயோகிக்க வேண்டும்.

ஃபேஷியல் செய்வதால், முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து, தளர்வடைந்த தசைகளை இறுகச் செய்யும். சுருக்கங்களைப் போக்கும். முகம் இளமையாக இருக்கும்.

கோல்டு ஃபேஷியலும் சருமத்திற்கு நிறமளிக்கும் வகையில் ஏற்றது. அதைப் போலவே பேர்ல் ஃபேஷியல் எண்ணெய் சருமம் பெற்றவர்களுக்கு ஏற்றது. வறண்ட சருமம் மற்றும் சென்ஸிடிவ் சருமம் உள்ளவர்கள் இதனை செய்வது தவிர்க்கலாம். அல்லது சரும அலர்ஜியை தவிர்க்க பேட்ச் டெஸ்ட் செய்த பின் உபயோகிக்கலாம். இது அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி, சருமத்தை முகப்பருக்களிலிருந்து பாதுகாக்கும். சுருக்கங்களை வர விடாமல் தடுக்கும்.

வெயிலினால் உண்டாகும் கருமையால் முகம் ஒரு நிறத்தையும், உடல் ஒரு நிறத்தையும் காண்பிக்கும். அப்படி இருப்பவர்கள் மாதம் ஒரு முறை பேர்ல் ஃபேஷியல் செய்யும்போது, கருமைக்கு குட்பை சீக்கிரம் சொல்லிவிடலாம். கரும்புள்ளி, மரு ஆகியவை நீங்கி, பளிச்சென்ற தோற்றத்தைப் பெறலாம்.

பேர்ல் ஃபேஷியல் செய்து கொண்டால், முகத்தில் உருவாகும் சுருக்கங்கள் விரைவில் மறைந்துவிடும். முகத்தோற்றம் பொலிவாக காண்பிக்கும். சருமம் ஜொலிக்கும்.

எண்ணெய் சருமம் இருப்பவர்களுக்கு அழுக்குகள் இறந்த செல்கள் ஆகியவை சருமத் துளைகளிலேயே அடைப்பட்டு சருமத்தை கடினமாக்கி, பிரச்சனைகளைத் தரும். அவர்களுக்கு ஏற்ற ஃபேஷியல் இது. ஏனெனில் இவை சருமத்தில் துளைகளிலிருக்கும் அழுக்களை நீக்கி சுத்தப்படுத்தும். துவாரங்களை சுருங்கச் செய்து, முகத்தை இளமையாக வைத்திருக்கும்.


Recommended For You

About the Author: Editor