இலங்கையில் கரையொதுங்கிய அபூவ கடல் உயிரினம்!

தென்னிலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு கடற்சிங்கம் ஒன்று சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிகம, மிதிகம பிரதேசத்தில் கடல் சிங்கம் என கருதப்படும் கடல் விலங்கு ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்த விலங்கு கரைக்கு அடித்து வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடற்சிங்கத்தை பார்வையிடுவதற்கு பெருமளவு மக்கள் அவ்விடத்திற்கு வருகைத்தந்துள்ளனர். இதனை முதலில் பார்த்த மக்கள் உடனடியாக பொலிஸாரிடம் அறிவித்துள்ளனர்.

குறித்த விலங்கின் உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளமையினால் உடனடியாக சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது


Recommended For You

About the Author: Editor