
பாராளுமன்ற கூட்டத்தொடரை, புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற கூட்டத்தொடரை ஜனாதிபதி ஒத்திவைப்பார் எனில், அடுத்த பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு 2020 ஆம் ஆண்டு, மே மாதம் 2ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதிக்கு, பாராளுமன்ற கூட்டத்தொடரை நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் ஒத்திவைக்க முடியும் .
இந்நிலையில் நடப்பிலிருக்கும் பாராளுமன்றத்தின் கூடத்தொடரின் நான்கரை ஆண்டுகள், 2020 மார்ச் மாதம் 2 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.