பாலில் நச்சுத்தன்மை குறித்து தீவிர விசாரணை அவசியம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவாகவுள்ள பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்தான விடயமாகும். எனவே இவ்விடயத்தில் தீவிர விசாரணை அவசியமென தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகமுள்ளதாக மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்து மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையிலேயே இவ்விடயம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, “குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவாகவும் விவசாயிகள் முதல் வணிகர்கள் வரை பலருக்கும் அடிப்படைப் பொருளாதார பலமாகவும் உள்ள பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்து.

இதன் உண்மைத் தன்மையை உணர்ந்து முதலமைச்சர் தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்