கஞ்சா புகைப்பதற்கு மாதாந்தம் 2.15 லட்சம் ரூபாய் சம்பளம்

கஞ்சா புகைப்பதற்காக மாதம் 2.15 லட்சம் ரூபாய் சம்பளத்துடன் பணிக்கு அமர்த்தத் தயாராகவுள்ளதாக அமெரிக்க நிறுவனம் அறிவித்துள்ளது.

‘American Marijuana’ என்னும் கஞ்சா மருத்துவ ஒன்லைன் இதழ் ஒன்று கஞ்சாவின் மருத்துவப் பயன்பாடுகள் குறித்து ஆராய்ச்சி செய்து செய்திகள் வெளியிட்டு வருகிறது.

இந்நிறுவனம் தற்போது கஞ்சா புகைக்க விரும்புபவர்களை பணியமர்த்தத் தேடி வருகிறதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த வேலைக்கு மாதம் 2.15 லட்சம் ரூபாய் சம்பளமும் வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு மாதமும் விதவிதமான கஞ்சா ரகங்களை சுவைத்து விமர்சிக்க வேண்டும்.

எனினும் பணிக்குச் சேர விரும்புவோர் தங்களது இருப்பிடத்தில் கஞ்சா சட்டப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை என கூறுகிறது.

இந்த ஒன்லைன் இதழின் முதன்மை ஆசிரியர் ட்வைட் ப்ளேக் கூறுகையில், ‘இந்தப் பணி குறித்த விபரங்கள் அனைத்துமே உண்மையானது. இதுவரையில் இந்தப் பதவிக்காக 3 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது எனக் கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்