ஆட்கடத்தல்காரர்கள் 17 பேர் கைது!

நீண்ட காலமாக பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு அகதிகளை கடத்திச் சென்ற கடத்தல்காரர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ், பிரித்தானிய, ருமேனியா ஆகிய நாட்டு காவல்துறையினர் கடந்த 10 மாதங்களாக மேற்கொண்டிருந்த விசாரணைகள் கண்காணிப்பின் பின்னர் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 2017 ஆம் ஆண்டு ருமேனியாவைச் சேர்ந்த இரு வாகன சாரதிகள் அகதிகளை பிரித்தானியா நோக்கி கடத்திச் சென்றிருந்தபோது கைது செய்யப்பட்டிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளில் வடக்கு பிரான்ஸ் முழுவதும் பலத்த சோதானை நடவடிக்கைகள் இடம்பெற்றன. அதேவேளை பெல்ஜியம், பிரித்தானியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

முதலாவது கைது ஜூன் 10 ஆம் திகதி Dunkerque துறைமுகத்தில் இடம்பெற்றது. இந்த ஆட்கடத்தல் குழுவின் தலைவன் ருமேனியாவிலும், அவனுடன் மேலும் ஒன்பது பேரும், பிரான்சில் ஆறு பேரும் என மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மொத்தமாக 259 தடவைகள் அகதிகளை கடத்த முற்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்


Recommended For You

About the Author: Editor