13ஆவது திருத்தச்சட்டம் குறித்து கலந்துரையாடப்படமாட்டாது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கு மேற்கொள்ளும் விஜயத்தின்போது 13ஆவது திருத்தச்சட்டம் குறித்து கலந்துரையாடப்படமாட்டாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை புதுடெல்லிக்குப் பயணமாகிறார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது தமிழர் பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமர் மோடி கலந்துரையாடுவார் என எதிர்பார்ப்பதாக புதுடெல்லி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அத்துடன், இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் இந்திய வீட்டுத் திட்டம் மற்றும் பிற திட்டங்களைத் தொடருவது குறித்தும் கலந்துரையாடப்படும் என்றும் இது பெரும்பாலும் தமிழர்களுக்கு பயனளிக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் கடந்த அரசாங்கங்களினால் விவாதிக்கப்பட்டு வந்த 13ஆவது திருத்தச்சட்டம் குறித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான முதல் சந்திப்பில், இந்தியப் பிரதமர் மோடி அழுத்தங்களைக் கொடுக்க வாய்ப்பில்லை என்றும் புதுடெல்லி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


Recommended For You

About the Author: ஈழவன்