சுகாதாரத் தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி ஆளுநர் அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

வடக்கு மாகாணம் முழுவதும் நீண்ட காலமாக தற்காலிக சேவையில் ஈடுபட்டு வந்த சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் எனக் கூறி பலமுறை ஆளுநரை சந்தித்து தமது பிரச்சினைகளை தெளிவுபடுத்தியுள்ளனர்.

இவர்களுக்கான நிரந்தர நியமனம் நேர்முகத் தேர்வின் மூலம் வழங்கப்படும் என ஆளும் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆளுநர் பதவி விலகியதை அடுத்து தமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆளுநர் அலுவலகத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரிடம் சுகாதாரத் தொண்டர்களின் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டது.


Recommended For You

About the Author: Editor