டெங்கினால் குடும்பஸ்தர் பரிதாப பலி!!

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நாவாந்துறை தெற்கை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய நாகரத்தினம் ராஜேந்திரன் என்பவர் எனத் தெரியவருகின்றது.

கடந்த 18ஆம் திகதி குறித்த நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், 21ஆம் திகதி இரவு வீட்டில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அவரை அனுமதிருந்த வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை அண்மைக்காலமாக யாழில் டெங்கின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களை அவதனமாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் மக்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor